பாஜக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருமா?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
பாஜக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருமா? - நயினார் நாகேந்திரன் பதில்
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பீகாரில் ராகுல்காந்தி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றம் சாட்டி வருகிறார். அவருடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்று இருப்பது வருத்தம் அளிக்கிறது.
ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ள 65 லட்சம் பேர் இறந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ராகுல்காந்தியுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் சேகர்பாபு என்னை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் ஒரு பயத்தில் என்னை அப்படி பேசி வருகிறார். ஆனாலும் பரவாயில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார். அவர் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.