சுகோயை தொடர்ந்து ரபேல்... மறக்க முடியாத அனுபவம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
சுகோயை தொடர்ந்து ரபேல்... மறக்க முடியாத அனுபவம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்திய விமான படையின் ரபேல் போர் விமானத்தில் இன்று முதன்முறையாக பறந்து சென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த முதல் போர் விமான பயணம் ஆனது, தேசத்தின் பாதுகாப்பு திறன் பற்றிய ஒரு புதிய பெருமைக்குரிய உணர்வை என்னுள் ஏற்படுத்தியது. இதனை வெற்றியுடன் நடத்தி முடித்ததற்காக, இந்திய விமான படை மற்றும் அம்பாலாவின் விமான படை தளத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். இதன்பின்னர் அவரிடம், ரபேல் போர் விமானம் மற்றும் இந்திய விமான படையின் செயல் திறன்களை பற்றி விரிவாக எடுத்து கூறப்பட்டது.
Update: 2025-10-29 09:46 GMT