மதுரை: சிறுமி உயிரிழப்பு - மழலையர் பள்ளியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
மதுரை: சிறுமி உயிரிழப்பு - மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து
மதுரை கே.கே.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்த நிலையில், ஸ்ரீ மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மழலையர் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மதுரை மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் பள்ளி உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-04-30 04:29 GMT