முதல்-அமைச்சர் சென்றிருப்பது அரசு பயணமா? இன்ப... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
முதல்-அமைச்சர் சென்றிருப்பது அரசு பயணமா? இன்ப சுற்றுலாவா? - பாஜக கேள்வி
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒரு மாநில முதல்-அமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணப்படுவது சாதாரணமே. ஆனால், இதற்கு முன்பு துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள். இதில், மார்ச் 2022 துபாய் பயணத்தில் மட்டும் 6,100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாகச் சொல்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் தொடங்கி மக்கள் அனைவரும் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என்று காரணம் சொல்லும் முதலீடுகளை ஈர்த்துவர வக்கற்ற அரசு மக்களின் வரிப்பணத்தில் இன்ப சுற்றுலா செல்வது சரியா?.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Update: 2025-08-30 07:34 GMT