நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் தகவல்
வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மோந்தா' புயல் உருவாகி, ஆந்திரா நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று இடைவெளி விட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15-ந் தேதிக்கு பிறகு மழை தீவிரம் எடுக்கவுள்ளது. வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார்.
Update: 2025-10-30 03:36 GMT