டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், அவர்களின் இந்த சந்திப்பு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையே கூட்டணி அமைப்பதற்கான சந்திப்பாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தமிழக அமைச்சர் ரகுபதி கூறும்போது, சந்திப்பு குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் வேறு வேறு காரணங்களை சொல்கிறார்கள். யார் பொய் சொல்கிறார்கள் என்பது விரைவில் தெரியும் என விமர்சித்து உள்ளார்.
Update: 2025-03-31 03:29 GMT