இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-03-31 08:58 IST


Live Updates
2025-03-31 14:16 GMT

டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

2025-03-31 14:15 GMT

குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதைசாலையில் சென்ற கார் திடீரென தீ பற்றி எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

2025-03-31 13:37 GMT

மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் எண்ணிக்கை 3,900ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-03-31 13:36 GMT

தமிழ்நாட்டின் அதிகபட்சமாக கரூர் பரமத்தி பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

2025-03-31 13:36 GMT

கும்பமேளாவில் வைரலான பெண்ணுக்கு கதாநாயகி வாய்ப்பு வழங்கிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025-03-31 13:36 GMT

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

2025-03-31 13:14 GMT

ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர் தனது 66 வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளார். 

2025-03-31 13:14 GMT

பண்ருட்டி அருகே வாகனங்களை வழிமறித்து கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

2025-03-31 13:11 GMT

டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2025-03-31 12:32 GMT

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மதுபாட்டில்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்