ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ஏப்ரல் 19-ந்தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.
இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்து நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், ஒரு நவீன மற்றும் திறன் வாய்ந்த ரெயில் சேவையானது இந்த பகுதிக்கு கிடைக்கும்.
Update: 2025-03-31 07:26 GMT