உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டில் புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டில் புதிய வழக்கறிஞர் அறை மற்றும் வாகனங்களை நிறுத்தும் கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பங்கேற்று அதனை திறந்து வைத்துள்ளார். இதில், 2,300-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என மிக பெரிய அளவில் வாகன நிறுத்தும் வசதிகளை கட்டிடம் கொண்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, நீதி துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மாநில அரசின் முயற்சிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டினார்.
Update: 2025-05-31 10:43 GMT