கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் முதல் முன்-பருவமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் முதல் முன்-பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு கர்நாடகாவில் மழைப்பொழிவு அதிகரித்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
கர்நாடகாவில் ஏற்பட்ட இந்த அதிக அளவிலான மழைப்பொழிவால், 67 பேர் பலியாகி உள்ளனர். அனைத்து 31 மாவட்டங்களிலும் இயல்புக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது. வெள்ளம் அல்லது நிலச்சரிவால் மொத்தம் 2,252 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 1,702 வீடுகள் சேதமடைந்து உள்ளன.
Update: 2025-05-31 11:51 GMT