ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர், தனக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கான ஓய்வூதியத்தை மீண்டும் கேட்டு, ராஜஸ்தான் அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வின் ஓய்வூதியம் ஒரு மாதத்திற்கு ரூ.35 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
தற்போது 74 வயதாகும் ஜெகதீப் தன்கருக்கு மாதம் ரூ.42 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அவர் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் எம்.பி. மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ. என 3 ஓய்வூதியங்களுக்கு தகுதியுடையவர்.
Update: 2025-08-31 05:10 GMT