தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
தமிழ்நாட்டில் இன்று(31-08-2025) நள்ளிரவு முதல் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி மதுரை - எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறைக்கு ரூ.5-ம், இருமுறைக்கு ரூ.10-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
FasTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் 2 மடங்கு வசூலிக்கப்பட உள்ளது. கார், வேன், ஜீப் ஒரே நாளில் பலமுறை செல்வதற்கான கட்டணம், ரூ.95-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டிரக், பஸ் ஒருமுறை செல்ல ரூ.225 இருந்து ரூ.230 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கார், வேன், ஜீப் மாதக் கட்டணம் ரூ.1,930-ல் இருந்து ரூ.1,975 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனம் ஒருமுறை செல்ல ரூ.360-ல் இருந்து ரூ.370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.