இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை.. மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் முக்கிய முடிவு


இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப்பிறகு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கொரோனா பெருந்தொற்று, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 

Update: 2025-08-31 07:12 GMT

Linked news