குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பிறகு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி; அலைமோதிய கூட்டம்
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை குறைந்ததால் இன்று காலை குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டது.
Update: 2025-08-31 12:58 GMT