‘எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025
‘எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார்' - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், 4 அடுக்குகளை கொண்ட ஜி.எஸ்.டி. வரியை 2 அடுக்காக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' தள பதிவில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை முழு மனதுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
Update: 2025-09-04 13:50 GMT