பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025

பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் காணொலி காட்சி வழியே இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பட்ஜெட்டை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்குங்கள் என வேளாண் துறையினரிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டதுடன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அடிமட்ட அளவில் விரைவாக அமல்படுத்தும்படியும் வலியுறுத்தினார்.

இந்த பட்ஜெட்டை தற்போது திறம்பட அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வளர்ச்சிக்கு முதல் இயந்திரம் என்று வேளாண்மை கருதப்படும் சூழலில், இந்த அரசானது, வேளாண் வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளம் ஆகியவற்றை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.

Update: 2025-03-01 10:39 GMT

Linked news