ரஷியா போரில் 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் -... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்
ரஷியா போரில் 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
செவெரோடோனெட்ஸ்கில் கடுமையான தெருச் சண்டைகள் தொடர்வதாகவும், பல வாரங்களாக ரஷிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய உக்ரேனியப் ராணுவ வீரர்கள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று போர் தொடங்கியதில் இருந்து ரஷியர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மே மாத தொடக்கத்தில் முழு டான்பாசையும் கைப்பற்ற ரஷியா எப்படி நம்பியது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது போரின் 108வது நாளாகும்... டான்பாஸ் நகரம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த பகுதி உட்பட ஆக்கிரமிப்பாளர்களால் ஏற்பட்ட இழப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மொத்தத்தில், ரஷிய இராணுவத்தில் இன்று சுமார் 32 ஆயிரம் இறந்த ஆத்மாக்கள் உள்ளன. எதற்காக இந்த போர்? இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது ரஷியா?” என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.