#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்
உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர், அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.;
பியோங்யாங்,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் தொடர்ச்சியாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் விளாடிமிர் புதினுக்கு முழு ஆதரவைத் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக கிம் ஜாங் உன், "ரஷ்ய மக்கள் அனைத்து வகையான சவால்கள் மற்றும் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு, தங்கள் நாட்டின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கான நியாயமான காரணத்தை நிறைவேற்றுவதில் பெரும் வெற்றிகளை அடைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார். இந்த தகவலை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்புத் தொழிற்சாலை தாக்குதலின் போது கொல்லப்பட்ட உக்ரைனிய போராளிகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக உக்ரைனின் அசோவ் தேசிய படைப்பிரிவின் முன்னாள் தளபதி தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் - ரஷியா போர் காரணமாக 100 நாட்களில் சுமார் 10,000 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருநாளை சராசரியாக 100 வீரர்கள் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது.
கீவ்,
உக்ரைனில் 100 நாட்களை கடந்து ரஷியா மேற்கொண்டு வரும் போரானது உக்கிரமடைந்து உள்ளது. உக்ரைனில் சிவிரோடோனெட்ஸ்க் நகரை ரஷிய படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நகரில் உள்ள அசோட் என்ற பெயரிலான ரசாயன தொழிற்சாலையின் கீழ் பகுதியில், குண்டுவீச்சில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பொதுமக்களில் 800 பேர் வரை பதுங்கியுள்ளனர்.
இந்த சூழலில், சிவிரோடோனெட்ஸ்க் மண்டல கவர்னர் செர்கி கைடய் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி மக்களிடம் பேசும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ள சிவிரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள அசோட் ரசாயன ஆலை தொடர்ந்து உக்ரைனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
ரஷியாவால் அசோட் கைப்பற்றப்படவில்லை. அந்த ஆலைக்கு அடுத்துள்ள தெருக்களில் போரானது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
ரஷிய படைகள் அவர்களுடைய அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்தி இன்று அல்லது நாளைக்குள் (திங்கட்கிழமை) அந்நகரை கைப்பற்ற முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று கவர்னர் செர்கி கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்லோவியான்ஸ்க் நகர் மீது புதிய தாக்குதலை நடத்த ரஷிய படைகள் தயாராகி வருகின்றன என உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது.
உக்ரைன் லுகான்ஸ்க் சுற்றுவட்டாரத்தில் பசியால் வாடும் மக்களுக்கு போலீசார் உணவு பொட்டலங்களை வழங்கினர். அதனை பெற ஒருவருக்கொருவர் முண்டியடித்து உணவு பொட்டலங்களை பெற்றனர்.
ரஷிய படையெடுப்பால் உருக்குலைந்த நகரங்களில் தொழில் உள்ள அன்றாட தேவைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சிதிலமடைந்த வீடுகளில் வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற திண்டாடி வருகின்றனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் உணவு சப்ளை செய்கினறனர். நகரில் போலீசார் தரும் உணவுப் பொட்டலங்களை பெற மக்கள் திரண்டனர்.
ரஷியா போரில் 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
செவெரோடோனெட்ஸ்கில் கடுமையான தெருச் சண்டைகள் தொடர்வதாகவும், பல வாரங்களாக ரஷிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய உக்ரேனியப் ராணுவ வீரர்கள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று போர் தொடங்கியதில் இருந்து ரஷியர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மே மாத தொடக்கத்தில் முழு டான்பாசையும் கைப்பற்ற ரஷியா எப்படி நம்பியது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது போரின் 108வது நாளாகும்... டான்பாஸ் நகரம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த பகுதி உட்பட ஆக்கிரமிப்பாளர்களால் ஏற்பட்ட இழப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மொத்தத்தில், ரஷிய இராணுவத்தில் இன்று சுமார் 32 ஆயிரம் இறந்த ஆத்மாக்கள் உள்ளன. எதற்காக இந்த போர்? இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது ரஷியா?” என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனுக்கு எதிரான போர் ரஷியாவின் ‘ஏகாதிபத்திய பசி’ - பென்டகன் தலைவர் கடும் தாக்கு
உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பு, அடக்குமுறையாளர்கள் நம் அனைவரையும் பாதுகாக்கும் விதிகளை மிதிக்கும்போது என்ன நடக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.
மேலும் , பெரிய சக்திகள் தங்கள் அமைதியான அண்டை நாடுகளின் உரிமைகளை விட தங்கள் ஏகாதிபத்திய ஆசைகள் முக்கியம் என்று முடிவு செய்யும் போது இது போன்ற போர்கள் நடக்கும்" என்றும் ஆஸ்டின் தெரிவித்தார்.
போலந்தில் நேட்டோ அமைப்பிற்கு பதிலடி கொடுப்போம் - ரஷியா
போலந்தில் நேட்டோ படைகளை கட்டியெழுப்பி வருவதற்கு மாஸ்கோவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்று ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட போலந்தில் நேட்டோ படைகளுக்கு பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்று ஐரோப்பாவுடனான ரஷிய உறவுகளுக்குப் பொறுப்பான வெளியுறவு அமைச்சகத் துறையின் தலைவர் ஒலெக் தியாப்கின் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் போருக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றார்.
அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைனை புனரமைப்புக்கு தேவையான கூட்டுப்பணிகள் குறித்தும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜெலன்ஸ்கியுடன் விவாதித்ததாக உர்சுலா வான் டெர் லேயன் கூறினார்.