உக்ரைன் போருக்கு மத்தியில் புதினுக்கு ஆதரவு தெரிவித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்
பியோங்யாங்,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் தொடர்ச்சியாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் விளாடிமிர் புதினுக்கு முழு ஆதரவைத் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக கிம் ஜாங் உன், "ரஷ்ய மக்கள் அனைத்து வகையான சவால்கள் மற்றும் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு, தங்கள் நாட்டின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கான நியாயமான காரணத்தை நிறைவேற்றுவதில் பெரும் வெற்றிகளை அடைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார். இந்த தகவலை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Update: 2022-06-12 14:30 GMT