பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்களே.. 190... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்களே.. 190 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தே.ஜ.கூட்டணி


பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும்நிலையில், தற்போது 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 189 ( பா.ஜ.க. - 86 , ஜே.டி.யு. - 76 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 5 , மற்றவை - 2)

இந்தியா கூட்டணி - 49 (ஆர்.ஜே.டி. - 35 , காங்கிரஸ் - 5 , இடது சாரிகள் - 8, விஜபி - 1)

ஜன் சுராஜ் -0

மற்றவை - 4

Update: 2025-11-14 06:38 GMT

Linked news