“அஞ்சான்” படத்தை ரசிகர்களோடு பார்த்து ரசித்த நடிகர் சூர்யா

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படம் கடந்த நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸானது.;

Update:2025-12-11 17:26 IST

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சான்’. இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தினை 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளிவந்த ‘அஞ்சான்’ ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளானது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரீ-எடிட் வெர்சன் கடந்த நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸானது. இந்த ரீ எடிட் வெர்ஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை. இப்படம் 2 வாரத்தில் இதுவரை ரூ.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா இயக்குநர் லிங்குசாமி மற்றும் ரசிகர்களுடன் இணைந்து ‘அஞ்சான்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்