ரோல்ஸ் ராய்ஸ் "ஸ்பெக்டர்" கார் வாங்கிய முதல் இந்திய இயக்குநர் அட்லி: எத்தனை கோடி தெரியுமா?
இயக்குநர் அட்லீ புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் "ஸ்பெக்டர்" என்கிற எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.;
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து, தற்கொடுத்து முன்னணி இயக்குநராக உள்ளார். இதுவரை 5 படங்களை இயக்கி வெளியிட்டிருக்கும் அட்லி தற்போது அல்லு அர்ஜுனை வைத்து AA22xA6 என்ற படத்தை இயக்கி வருகிறார். சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமாக உருவாகும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், AA22xA6 என்று அழைக்கப்படும் பட வேலைக்கு நடுவே அட்லீ பற்றி வேறு ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது. அதாவது, இயக்குநர் அட்லீ புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் "ஸ்பெக்டர்" என்கிற எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே இந்த கார் வைத்திருக்கும் ஒரே இயக்குநர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் விலை ரூ. 7.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.