பாலையாவின் அதிரடி ஆக்ஷனில் ‘அகண்டா-2'.. தமிழகத்தில் மட்டும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது
ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள 'அகண்டா-2' படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.;
சென்னை,
14 ரீல்ஸ் பிளஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, இஷான் சக்சேனா தயாரித்து, போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள புதிய படம் 'அகண்டா-2'. பால கிருஷ்ணா (பாலையா) கதாநாயகனாக நடித்துள்ளார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வரும் 'அகண்டா-2' படம் குறித்து அதன் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு கூறியதாவது:- அறிவியலுக்கே சவால் தரும் வகையில் தனது அதிரடி ஆக்ஷன் காட்சிகளால், ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக வலம் வருகிறார், பாலகிருஷ்ணா. அவரது மிரட்டல் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த அகண்டா படத்தின் அடுத்த பாகமான அகண்டா-2 நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
'சிம்ஹா', 'லெஜண்ட்', 'அகண்டா'என வெற்றிப்பட வரிசையில் 4-ம் முறையாக எனது இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். சம்யுக்தா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் இருக்கிறார்கள். எப்போதும் போலவே இந்த படத்தில் ஆக்ஷனுக்கு குறைவே இருக்காது. பாலகிருஷ்ணா ரசிகர்கள் குதூகலித்து கொண்டாடும் வகையில் இப்படம் இருக்கும். குறிப்பாக ஆக்ஷன் அதிரடி காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
முதல் பாகம் தெலுங்கு தாண்டி இதர மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல இந்த பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழகத்தில் மட்டுமே இப்படம் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. 3-டி படைப்பாகவும் வெளியாவது கூடுதல் சிறப்பாகும். எனவே ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் காத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 'அகண்டா-2' தரிசனம் கிடைக்கும். ரசிகர்கள் கொண்டாட காத்திருங்கள்”, என்று இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு தெரிவித்துள்ளார்.