தனிஷ்க் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதர்...நடிகை அனன்யா பாண்டே நியமனம்
அனன்யா பாண்டே தனது திரையுலக வாழ்க்கையை 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ படத்தின் மூலம் தொடங்கினார்.;
சென்னை,
பாலிவுட் திரையுலகில் தனது இளமையான தோற்றம், திறமையான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நடிகை அனன்யா பாண்டே, தற்போது தனிஷ்க் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனன்யா பாண்டே தனது திரையுலக வாழ்க்கையை 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் ‘காலி பீலி’, ‘கெஹ்ரையன்’, ‘லைகர்’, ‘சி.டி.ஆர்.எல்’ போன்ற படங்களில் நடித்து மிக விரைவில் பிரபலமானார். இளமையும் ஸ்டைலும் கலந்த இவர், இன்று ரசிகர்களின் மிகப் பிரியமான பாலிவுட் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
தனிஷ்க் நிறுவனம், டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் பிரபல நகைக்கடை, சமீபத்தில் புதுவித வைர நகைகள் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நகைகள், நவீன பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றத்தின் அடையாளமாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் அறிமுகப்படுத்திய நகைகள் வரிசையில் தோடுகள், ஜிமிக்கிகள், காது மாட்டி, மோதிரங்கள், வளையல்கள், நெக்லஸ்கள், கைச்சங்கிலி போன்ற பல வகைகள் உள்ளன. விலை ரூ.10,000 முதல் தொடங்குகிறது. மேலும், வைரத்தின் மதிப்பை பொறுத்து விற்பனை விலையில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.