நடிகை சாந்தினியின் புதிய திரைப்படம்...பூஜையுடன் துவக்கம்
இப்படத்தை விகாஸ் இயக்குகிறார்.;
சென்னை,
நடிகை சாந்தினி சவுத்ரி மற்றும் நடிகர் சுஷாந்த் யாஷ்கி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தை விகாஸ் இயக்குகிறார்.
சஹாச்சாரி கிரியேஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் ஸ்ருஜனா கோபால் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஐதராபாத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஜீவன் குமார் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிதின் ஒளிப்பதிவு செய்கிறார்.