“டிமான்ட்டி காலனி 3” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 3’ படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.;
சென்னை,
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி , பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தை பெற்றது.
இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.