“துரந்தர்” திரைப்படத்திற்கு வரி விலக்கு வழங்கிய லடாக் துணைநிலை கவர்னர்

லடாக்கில் அதிகமானோர் படப்பிடிப்பு நடத்த ‘துரந்தர்’ படத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக கவர்னர் அலுவலகம் அறிவித்துள்ளது.;

Update:2026-01-02 16:11 IST

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘துரந்தர்’. 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

‘துரந்தர்’ படம் இந்து - முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன. இருப்பினும், வசூலில் வேகம் குறையாமல் ‘துரந்தர்’ வலம் வருகிறது.

‘துரந்தர்’ படம் 28 நாட்களில் உலகளவில் ரூ.1200 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.784.50 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் ரூ.1,000 கோடி வசூலித்த ஒரே இந்திய படம் என்ற சாதனை ‘துரந்தர்’ படைத்துள்ளது. ‘துரந்தர்’ படம் 17 நாட்களில் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்து ‘காந்தாரா சாப்டர் 1’ சாதனையை முறியடித்தது.

இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் “பாலிவுட் திரைப்படமான 'துரந்தர்' படத்துக்கு லடாக்கில் வரி விலக்கு அளிக்கப்படுவதாக கவர்னர் கவிந்தர் குப்தா அறிவித்துள்ளார். லடாக்கில் விரிவாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினால் லடாக் சினிமாட்டிக் அனுபவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இயக்குநருக்கு ஆதரவு தெரிவிக்கவும் மேலும் இங்கு அதிகமானோர் படப்பிடிப்பு நடத்த ஊக்குவிக்கவும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்