'இட்லி கடை' படத்தில் தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் கசிந்தது

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.;

Update:2024-12-01 16:27 IST

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இப்படங்களையடுத்து, தனுஷ் இயக்கி இருக்கும் படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷ் நடிக்கும் 52வது திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அருண்விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில், திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியானது. அதன்படி, 'இட்லி கடை' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தனுஷ் தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். மீசை தாடியை எடுத்துவிட்டு தனுஷ் மிகவும் இளமையான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்த தோற்றத்தில் உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்