தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் - மிருணாள் தாகூர் கூறியது யாரை தெரியுமா?

மிருணாள் எப்போது தமிழ் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.;

Update:2025-03-06 01:18 IST

சென்னை,

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமம், ஹாய் நானா, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'பேமிலி ஸ்டார்'. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சோபிக்க தவறியது.

தற்போது இவர் தெலுங்கில் 'டகோயிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பல மொழி படங்களில் நடித்து வரும் மிருணாள் எப்போது தமிழ் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து விரைவில் கோலிவுட்டுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் மிருணாள் தாகூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்றும் யாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும், யாருடன் சேர்ந்து நடனமாட வேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அதன்படி, நடிகர் கமலுடன்தான் நடிக்க வேண்டும் என்றும் அவருடன்தான் நடனமாட ஆசை இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்