முன்னாள் கணவரின் ரூ.30 ஆயிரம் கோடி சொத்துக்கு குறிவைக்கும் கரிஷ்மா கபூர்

தனக்கும், குழந்தைகளுக்கும் உரிமையான சொத்தில் பங்கு வேண்டும் என கரிஷ்மா கபூர் வழக்கு தொடுத்துள்ளார்.;

Update:2025-11-21 06:39 IST

பிரபல தொழில் அதிபரான சஞ்சய் கபூர், நந்திதா மதானி என்பவரை திருமணம் செய்துகொண்டு பிரிந்தார். பின்னர் 2003-ம் ஆண்டு நடிகை கரிஷ்மா கபூரை திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் 2016-ல் அவரை பிரிந்தார். இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். அதன்பின்னர் பிரியா சச்தேவ் என்பவரை 2017-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் சஞ்சய் கபூர் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து அவரது சோனா கொம்ஸ்டார் நிறுவனத்தின் இயக்குனராக பிரியா சச்தேவ் பொறுப்பேற்றார். இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

Advertising
Advertising

இந்தநிலையில் ரூ.30 ஆயிரம் கோடி சந்தை மதிப்புடைய தனது முன்னாள் கணவர் நிறுவன சொத்தில் இருந்து பங்கு கேட்டு, டெல்லி ஐகோர்ட்டில் கரிஷ்மா கபூர் வழக்கு தொடுத்துள்ளார். தனக்கும், குழந்தைகளுக்கும் உரிமையான சொத்தில் பங்கு வேண்டும் என்று அதில் கேட்டிருக்கிறார்.

விவாகரத்து செய்தபோது கரிஷ்மா கபூருக்கு பெரிய தொகையை சஞ்சய் கபூர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்