மம்முட்டியின் “களம்காவல்” பட ரிலீஸ் ஒத்திவைப்பு

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-20 20:47 IST

மூத்த நடிகரான மம்முட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

 ‘களம்காவல்’ படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர். காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.‘களம்காவல்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘களம்காவல்’ திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றது எனவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு இன்று அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்