எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது - நடிகை மிருணாள் தாகூர்
விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டேன் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.;
நடிகர் தனுசை தொடர்ந்து, தற்போது கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருடன் ‘கிசுகிசு'க்கப்பட்டு வருகிறார், நடிகை மிருணாள் தாகூர். இருவரும் அடிக்கடி ‘டேட்டிங்' செல்வதாகவும், ரகசியமாக சந்திப்புகளில் ஈடுபடுவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வரும் கிசுகிசுக்கள் குறித்து மிருணாள் தாகூரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், "பிரபலங்கள் என்றாலே விமர்சனங்களை சந்தித்து, அதை எதிர்கொண்டு தான் வாழவேண்டும். ஆரம்பத்தில் எனக்கு கடினமாக இருந்தது. இப்போது ‘இவ்வளவுதானே...' என்று பழகிவிட்டது. விமர்சனங்களை பொருட்படுத்தவே மாட்டேன். எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது" என்றார்.