புற்றுநோயால் அவதிப்படும் நடிகை வாஹினி
வாஹினியின் உடல்நிலை குறித்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.;
சென்னை,
தற்போது, சீரியல் நடிகை வாஹினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தெலுங்கு திரைப்படம் மற்றும் சீரியல் பிரியர்களுக்கு நன்கு தெரிந்தவர். ஒரு காலத்தில் பல தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் துணை வேடங்களில் நடித்து தனக்கென ஒரு பெயரைப் பெற்றார் .
தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். 1978 இல் பிறந்த வாஹினி பல தமிழ் , தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து நல்ல பெயரைப் பெற்றார்.
இந்நிலையில், நடிகை வாஹினியின் உடல்நிலை குறித்த செய்தி ரசிகர்களையும் திரைப்படப் பிரபலங்களையும் அதிர்ச்சியடைய செய்துளது. கடந்த சில மாதங்களாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை வாஹினி. நிலைமை மிகவும் மோசமாகி, அவர் தற்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.