சர்வானந்தின் 38-வது படத்தில் இணைந்த விஷால் பட நடிகை

சமீபத்தில் இப்படத்தில் நடிகை அனுபமா இணைந்தார்.;

Update:2025-04-28 15:32 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சர்வானந்த் . 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடைய பிரபலமான இவர், தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கான ஜானு, ஸ்ரீஹாரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தற்போது தனது 38-வது படத்தில் நடிக்க உள்ளார். ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கே.கே.ராதா மோகன் தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செரிரோலியோ இசையமைக்கிறார்.

சம்பத் நந்தியால் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தில் நடிகை அனுபமா இணைந்தார். இந்நிலையில், தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'வீரமே வாகை சூடும்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த டிம்பிள் ஹயாதி இப்படத்தில் இணைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்