இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் ஏ.ஐ. புகைப்படங்கள்
சமீப காலமாக சமூக வலைதளங்களில் நடிகைகளின் கவர்ச்சி தோற்றங்கள் வெளியாகி வருகின்றன.;
சமீப காலமாக முன்னணி கதாநாயகிகளின் படங்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.
இது போன்ற புகைப்படங்களுக்கு நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகைகளின் கவர்ச்சி தோற்றங்கள் வெளியாகி வருகின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி திரை உலகினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா பிகினி தோற்றத்தில் இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான போலியான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.