பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்.. ‘வித் லவ்’ ஹீரோ அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக்

அபிஷன் ஜீவிந்த், தற்போது ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.;

Update:2026-01-28 10:19 IST

கடந்த ஆண்டு சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை மதன் இயக்கியுள்ளதுடன், ஹீரோயினாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ‘வித் லவ்’ திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அபிஷன் ஜீவிந்த், “வித் லவ் படத்தின் இயக்குநர் மதன், நான் இயக்கிய டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். அந்த படத்தின் படப்பிடிப்பு காலத்திலேயே இந்த கதையை என்னிடம் கூறினார். கதையை கேட்டதும், அதில் காதல், நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தும் இருந்ததால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

மேலும், “இந்த படத்திற்கு பல தலைப்புகளை யோசித்தோம். ஆனால் முழு படத்தையும் பார்த்தபோது அது ஒரு காதல் கடிதம் போல உணர்ந்ததால் ‘வித் லவ்’ என்ற தலைப்பை தேர்வு செய்தோம்” என தெரிவித்தார்.

டீசர் வெளியான பின்னர் நடிகர் பிரதீப் ரங்கநாதனை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தது குறித்துப் பேசிய அவர், “முதல் படம் இயக்கி, அடுத்ததாக நடிகராகியிருப்பது போன்ற சில ஒற்றுமைகள் காரணமாக அப்படிச் சொல்கிறார்கள். ஆனால் படம் பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறிவிடும்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்