''அவருடன் பணிபுரிந்தது 'மறக்க முடியாத அனுபவம்''' - கியாரா அத்வானி பாராட்டும் நடிகர் யார்?

கியாரா அத்வானி நடித்துள்ள ''வார் 2'' படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.;

Update:2025-07-11 21:30 IST

மும்பை,

ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் வார் 2.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளநிலையில், ஹிருத்திக் ரோஷனுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம் என்று கியாரா அத்வானி தெரிவித்திருக்கிறார் .

கியாரா அத்வானி தனது எக்ஸ் பக்கத்தில், "ஹிருத்திக் உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

ஆதி சார், அயன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அற்புதமான குழுவினர் வார் 2-க்கு உயிர் கொடுத்ததை உலகம் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்'' இவ்வாறு பகிர்ந்துள்ளார்

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்று ''வார் 2''. இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்