வெற்றிமாறனின் படத்தில் விஜய் நடிக்க நான் ஆசைப்பட்டேன் - எஸ்.ஏ. சந்திரசேகர்

‘சிறை’ படத்தின் முன்னோட்ட விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்;

Update:2025-12-23 14:43 IST

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு தற்போது ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கும் சிறை படத்தில் நடித்துள்ளார். இதில், எல்.கே.அக்‌ஷய் குமார் மற்றும் அனந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். இத்திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘சிறை’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்.அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு. ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க.

விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன். அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த 'சிறை' படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்? படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட 'நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா'னு கேட்டதாக சொன்னாங்க.” எனப் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்