வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்?- ராஷ்மிகாவின் சுவாரஸ்ய பதில்
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.;
நடிகர் விஜய்தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் சமீபத்தில் இருவருக்கும் நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த சூழ்நிலையில் ராஷ்மிகா வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘கணவராக வருகிறவர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் ஒருவரை நான் விரும்புகிறேன். உண்மையிலேயே நல்லவர், எனக்காக போராடக் கூடிய ஒருவர் நாளை எனக்கு எதிராக ஒரு போர் நடந்தால் என்னுடன் அல்லது எனக்காக போராடக் கூடிய ஒருவர் எனக்கு தேவை’ என கூறினார். தொடர்ந்து ராஷ்மிகாவிடம், இதுவரை நீங்கள் இணைந்து நடித்த நடிகர்களில் யாரை ‘டேட்’ செய்வீர்கள்? யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்?’ என்ற கேள்விக்கு விஜய்தேவரகொண்டாவை ‘டேட்’ செய்து அவரை திருமணம் செய்து கொள்வேன்’ என ராஷ்மிகா பதிலளித்தார்.
விஜய்தேவரகொண்டாவுடன் திருமணம் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ராஷ்மிகா தற்போது கூறிய கருத்துக்கள் திருமண செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.