துல்கர் சல்மான் வீட்டில் இன்னொரு கார்...விலை என்ன தெரியுமா?
துல்கர் சல்மான் தற்போது காந்தா படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
மலையாள ஹீரோ துல்கர் சல்மான் தனது வீட்டில் ஏற்கனவே அனைத்து பிராண்டு கார்களையும் வைத்திருக்கிறார். இருப்பினும், இப்போது அவர் மற்றொரு புதிய காரை வாங்கியுள்ளார்.
துல்கர் சல்மான் ஒரு லேண்ட் ரோவர் டிபென்டர் 100 ஆக்டர் எடிஷன் காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காரின் விலை ரூ. 3 கோடி என்று கூறப்படுகிறது.
துல்கர் சல்மான் தற்போது காந்தா படத்தில் நடித்துள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.