காமன்வெல்த் மகளிர் ஆக்கி போட்டி : கானா அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா..!

5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி;

Update:2022-07-30 06:45 IST

Image Courtesy : Hockey India Twitter

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா நேற்று முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

இதில்  மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா -கானா அணிகள் மோதின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.இதனால் இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி.இந்த வெற்றியால் காமன்வெல்த்  போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்