காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலப்பதக்கம் வென்றார்

குத்துச்சண்டை அரையிறுதி ஆட்டத்தில் கானாவின் ஜோசப் காமியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Update: 2022-08-06 19:05 GMT

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 12 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான (57 கிலோ) குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் கானாவின் ஜோசப் காமியை எதிர்த்து போட்டியிட்டார். இப்போட்டியில் முகமது ஹுசாமுதீன் 1-4 என்ற கணக்கில் கானாவின் ஜோசப் காமியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த பதக்கதையும் சேர்த்து இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்