காமன்வெல்த் ஆடவர் ஆக்கி : 8-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
8-0 என்ற கணக்கில் கனடா அணியை வீழ்த்தி இந்தியா அபரா வெற்றி பெற்றது.;
Image Courtesy : India All Sports Twitter
பர்மிங்ஹாம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 11-0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைதொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த ஆட்டதில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 4-4 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது
இந்த நிலையில்,'பி' பிரிவில் இந்திய அணி இன்றைய போட்டியில் கனடாவை எதிர்கொண்டது .ஆட்டம் தொடங்கிய முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.இதனால் இந்த போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து முன்னிலை பெற்றது.
போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 கோல்கள் அடித்து அசத்தியது.இறுதியில் 8-0 என்ற கணக்கில் கனடா அணியை வீழ்த்தி அணியை இந்தியா அபரா வெற்றி பெற்றது.