காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் நிகாத் ஜரீன் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

நிகாத் ஜரீன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹெலினா இஸ்மாயில் பகோவை வீழ்த்தினார்.

Update: 2022-07-31 12:05 GMT

Image Tweeted By @BFI_official

பர்மிங்காம்,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது. குறிப்பாக காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்கக் கணக்கை திறந்து வைத்தார் வீராங்கனை மீராபாய் சானு.

இன்று நடைபெற்ற பளு தூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்க பதக்கம் வென்று அசத்தினார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டை பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதிக்கு முந்தய சுற்றில் அவர் ஹெலினா இஸ்மாயில் பகோவை (மொசாம்பிக்) வீழ்த்தினார். இந்தியாவின் காமன்வெல்த் பதக்க நம்பிக்கைகளுள் ஒருவராக நிகாத் ஜரீன் திகழ்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்