வளம் தரும் வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

வளர்பிறை சதுர்த்தி வெள்ளிக்கிழமையுடன் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.;

Update:2025-05-29 13:50 IST

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு. இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். பெரும்பாலான பக்தர்கள் இந்த நாளில்தான் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது வழக்கம். துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.

அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானதாகும்.

அவ்வகையில் நாளை (30-5-2025) வளர்பிறை சதுர்த்தி நாள் ஆகும். நாளைய தினம் வீட்டில் பூஜை செய்வதுடன், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கி வழிபட வேண்டும். அப்போது விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

வளர்பிறை சதுர்த்தி வெள்ளிக்கிழமையுடன் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு உகந்தது வெள்ளிக்கிழமை. எனவே, இந்த நாளில் விநாயகருடன், மகாலட்சுமியையும் வழிபட வாழ்வில் வளமும் நலமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்