தோல்வியால் மனம் உடைந்து கண்ணீர் விட்ட ஜப்பான் வீரர்கள், ரசிகர்கள் - வீடியோ
ஜப்பான் அணி வீரர்கள் மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கினர்.;
Image Tweet by Jio Cinema
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். அதன்படி, 16 அணிகள் 2வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற 2வது சுற்று போட்டியில் ஜப்பான் -குரேஷியா அணிகள் மோதின. தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன. கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இதனால் ஜப்பான் அணி தொடரிலிருந்து வெளிறியது.
குரூப் போட்டிகளில் ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பலவாய்ந்த அணிகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான், இறுதியில் பெனால்டிகளை தவறவிட்டதால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது .இந்த தோல்வியால், வரலாற்றில் முதல்முறையாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான ஜப்பானின் முயற்சி தோல்வி அடைந்தது .
இதனால் ஜப்பான் அணி வீரர்கள் மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கினர்.
ありがとう、さようなら #Japan's magnificent run at the #WorldsGreatestShow comes to an end
— JioCinema (@JioCinema) December 6, 2022
Here's wishing them all the luck for 2026 #JPNCRO #Qatar2022 #FIFAWorldCup #FIFAWConJioCinema #FIFAWConSports18 pic.twitter.com/5kcz0L8On9