கத்தார் உயர்கோபுரத்தில் கால்பந்து ஜாம்பவான் பீலே படம் வெளியீடு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பிரேசில் ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-12-04 07:18 GMT

தோஹா,

சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் பிரேசில் ஜாம்பவான் பீலே(வயது 81) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ என்பதாகும். கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.அவர் சமீப காலமாக மிகவும் பலவீனமான உடல்நலத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பீலேவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் தொடர்ந்து இருந்து வந்தது. இதனை தொடர்ந்து, அவரை மருத்துவமனையின் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருவதை அடுத்து, பல அணிகளின் முன்னனி வீரர்களும், ரசிகர்களும் அவர் நலம் பெற்று திரும்ப பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள கலீபா மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தில் கெட் வெல் சூன் பீலே என்று திரையிடப்பட்டது.

பீலே உடல்நலம் தேற வேண்டும் என்பதற்காக இவ்வாறு திரையிடப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்