டெல் இன்ஸ்பிரான் லேப்டாப்

கம்ப்யூட்டர் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபல மான டெல் நிறுவனம் இன்ஸ் பிரான் 14 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-04-13 17:36 IST

இதில் நிறுவனத்தின் டெல் மற்றும் ஏ.எம்.டி. ரைஸன் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது பயனாளிகளுக்கு மேம்பட்ட வீடியோகேம் அனுபவத்தை அளிக்கக் கூடியது. மேலும் இனிய இசையை வழங்க டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இது 14 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதில் 13-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் உள்ளது. 54 வாட் அவர் பேட்டரி 65 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. விண்டோஸ் 11 இயங்குதளம் உடையது. இதன் விலை சுமார் ரூ.64,900.

Tags:    

மேலும் செய்திகள்