ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.;
மும்பை,
2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, நிப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 559 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 154 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 49 ஆயிரத்து 748 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
186 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 690 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 56 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 277 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 28 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 960 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 192 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 56 ஆயிரத்து 450 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.