டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
இந்தியாவின் இறக்குமதி குறைவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்து வருகிறது.;
Photo Credit: PTI
மும்பை,
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. நாளுக்கு நாள் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்று வர்த்தக நேர முடிவில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.90.78 ஆக பதிவானது.
இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும் ரூபாயின் மதிப்பு மேலும் 9 காசுகள் குறைந்து ரூ.90.87 ஆக வீழ்ந்தது. சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது, இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாதது, மேலும் இந்தியாவின் இறக்குமதி குறைவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலவரம் இந்திய ரூபாயின் மதிப்பிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.